இருமுறை கலைந்த கரு.. 42 வயதில் இரட்டை குழந்தை பெற்ற சீரியல் நடிகை.. நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Friday,July 26 2024]

பிரபல சீரியல் நடிகை 10 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் அவருக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை அடுத்து சின்னத்திரை உலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜீ தமிழில் ஒளிபரப்பான ’சத்யா’ சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ஜூலி. இவரது உண்மையான பெயர் விசாலாட்சி என்றாலும் ஜூலி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நடிகை மட்டுமின்றி இவர் ஒரு நல்ல டான்ஸர் என்பதும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’சத்யா’, ‘சித்திரம் பேசுதடி’ உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்த நிலையில் திருமணம் ஆகி 10 வருடங்களாக இவருக்கு குழந்தை இல்லாமல் இருந்தது. ஏற்கனவே இரண்டு முறை கருத்தரித்து அந்த கருக்கள் கலைந்துவிட்டதாக பேட்டி ஒன்றில் கண்ணீருடன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீண்டும் கர்ப்பமான நிலையில் தான் கர்ப்பமானதை அவர் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார் . வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த பிறகு தான் அவர் கர்ப்பமானது பலருக்கு தெரியவந்தது.

இந்த நிலையில் ஜூலி தனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருப்பதாகவும் ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை என்றும் என்று தனது சமூக வலை தளத்தில் அறிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு சின்னத்திரை உலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

More News

யோகி பாபு நடிப்பில், சட்னி சாம்பார் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சீரீஸ்:  தனித்துவமான விளம்பரங்கள் ..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் 'சட்னி - சாம்பார்' சீரிஸை,

ஜேசன் சஞ்சய் படம் குறித்த வதந்தி.. ஒரே ஒரு ட்வீட்டில் அடித்து நொறுக்கிய லைகா..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியான நிலையில் அந்த படம் ட்ராப் என்று கடந்த சில வாரங்களாக

அடுத்தவன் பொண்டாட்டி அழகா இருந்தா பொறாமை.. செல்வராகவன் வெளியிட்ட வீடியோ..!

நடிகர் மற்றும் இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தத்துவ கருத்துக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வரும் நிலையில் சற்று முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

மகன் ஹீரோவானதை பெருமையுடன் அறிவித்த வனிதா விஜயகுமார்.. நெகிழ்ச்சியான பதிவு..!

நடிகை வனிதா விஜயகுமார் மகன் விஜய்ஸ்ரீ ஹரி நாயகனாக அறிமுகமாகும் படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் வனிதா விஜயகுமார்

சூர்யாவின் 'கங்குவா' படத்தில் கார்த்தி.. வில்லனா? சிறப்பு தோற்றமா?

சூர்யா நடித்து முடித்துள்ள 'கங்குவா' திரைப்படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அவரது கேரக்டர் வில்லன் போல் வடிவமைக்கப்பட்டு அடுத்த பாகத்தில் அவரது கேரக்டருக்கு