இன்னொரு சித்ராவாக நான் மாறிவிடக்கூடாது: சீரியல் நடிகையில் அதிர்ச்சி பேட்டி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரை நடிகை ஜெனிபர் என்பவர் தனக்கு சித்ராவின் நிலைமை வந்து விடக் கூடாது என்பதற்காக நியாயம் கேட்டு வந்திருக்கிறேன் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சின்னத்திரை நடிகை ஜெனிபர் என்பவர் ஏற்கனவே திருமணம் செய்து அதன் பின் விவாகரத்து பெற்று விட்டு உதவி இயக்குனர் நவின் என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் முதல் திருமணத்தை மறைத்து விட்டதாக நவீன் ஜெனிபரிடமும் அவருடைய தந்தையிடம் சண்டை போட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ஜெனிபர் தந்தையை நவீன் மற்றும் அவருடைய நண்பர்கள் அடித்து விட்டதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஜெனிஃபர் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துவிட்டு இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார். தனக்கு முதல் திருமணம் நடைபெறவில்லை என்றும் அவர் தனது காதலன் மட்டுமே என்றும் பத்திரிகையாளர்கள் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்றும் கூறினார்.
மேலும் நவீன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தனது தங்கையை மான்பங்க படுத்திவிட்டர்கள் என்றும் தந்தையை அவர்கள் தாக்கியதாகவும் தனக்கு நியாயம் கிடைக்கவே போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்க வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு சித்ராவின் நிலைமை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் தான் நியாயம் கேட்டு வந்திருப்பதாகவும் தனது தங்கையை பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். சீரியல் நடிகை ஜெனிபரின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments