துணை நடிகை ஜெயா கொலை வழக்கில் பிடிபட்ட தோழியின் வாக்குமூலம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை சாலிகிராமம் பகுதியில் தனியாக வசித்து வந்த துணை நடிகை ஜெயா கொலை செய்யப்பட்டு அலங்கோலமாக கிடந்தார் என்ற செய்தியை சமீபத்தில் பார்த்தோம். இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்த நிலையில் தற்போது கொலையாளி பிடிபட்டுள்ளார்.
ஜெயா வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்த காவல்துறையினர் சம்பவம் நடந்த அன்று ஒரு ஆட்டோவில் இருந்து இருவர் இறங்கி ஜெயாவின் வீட்டின் உள்ளே சென்றதை கண்டுபிடித்தனர். பின்னர் ஆட்டோ நம்பரை வைத்து விசாரணை செய்ததில் சம்பவத்தன்று ஜெயா வீட்டிற்கு சென்றது அவரது தோழி அசினா மற்றும் ஆட்டோ உரிமையாளர் சிராஜூதின் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது ஜெயா கூறிய வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சினிமாவில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் ஆண் நண்பர்களை அழைத்து உல்லாசமாக இருந்து அதில் கிடைக்கும் வருமானத்தில் இருவரும் வாழ்க்கையை நடத்தியதாக அசினா குறிப்பிடுள்ளார். இந்த வருமானத்தை பங்குபோடுவதில் தகறாரு ஏற்பட்டதால் தனது காதலன் சிராஜூதின் உதவியுடன் ஜெயாவை கொலை செய்ததாக அசினா ஒப்புக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com