குரைக்கிற நாய் குரைக்கட்டும்.. புதிய கார் வாங்கிய நடிகையின் ஆவேச பதிவு..!

  • IndiaGlitz, [Tuesday,August 22 2023]

தொலைக்காட்சி சீரியல் நடிகை புதிய கார் வாங்கி உள்ள நிலையில் அது குறித்த பதிவில் குரைக்கிற நாய் குரைக்கட்டும், கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டு வாருங்கள் என்று பெண்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலில் நடித்த போது விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து நடிகை சம்யுக்தா திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு சில மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அந்தரங்க விஷயங்கள் உள்பட பல விஷயங்களை குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சம்யுக்தா புதிய கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேதபுரீஸ்வரர் கோயிலில் பூசணிக்காய், தேங்காய் உடைத்து கார் வாங்கியதற்கு பூஜை போட்ட வீடியோவை பதிவு செய்துள்ள சம்யுக்தா, குரைக்கிற நாய் குறைக்கட்டும், தனியாக ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து முன்னேறுவது இந்த சமூகத்தில் சாதாரண விஷயம் இல்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி.

பெண்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை மட்டும் அடைய முயற்சி செய்யுங்கள், கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வாருங்கள், ஆணாதிக்க நபர்களுக்கு மத்தியில் லேடி பாஸ்ஸாக கெத்து காட்டுங்கள், அதுவே அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும்’ என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

More News

அம்மா ஆகுறதுக்கு கர்ப்பமானா போதாதா? கல்யாணம் எதுக்கு? 'மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி' டிரைலர்..!

அனுஷ்கா நடிப்பில் உருவான மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் 'பொலிஷெட்டி'  என்ற திரைப்படம்  செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில்

சென்னை திரும்பிவிட்டார் ரஜினிகாந்த்: 'தலைவர் 170' படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் சமீபத்தில் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றார் என்பதும் அந்த பயணத்தை முடித்துவிட்டு நேற்று இரவு

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் மை3  சீரிஸின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் “மை3” சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியாகியுள்ளது.

உங்களுக்கு என் ஜோக் புரியவில்லை என்றால் வளருங்கள்: நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த பிரகாஷ்ராஜ்..!

சந்திராயன் 3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ்

ஆகஸ்ட் 28 முதல் 'இதயம்' சீரியல்.. ஜீ தமிழ் வெளியிட்ட அறிவிப்பு 

சின்னத்திரையில் புதிய சீரியல்கள் பெரும் வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் 'இதயம்' என்ற சீரியல் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.