close
Choose your channels

குரைக்கிற நாய் குரைக்கட்டும்.. புதிய கார் வாங்கிய நடிகையின் ஆவேச பதிவு..!

Tuesday, August 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தொலைக்காட்சி சீரியல் நடிகை புதிய கார் வாங்கி உள்ள நிலையில் அது குறித்த பதிவில் குரைக்கிற நாய் குரைக்கட்டும், கடுமையாக உழைத்து முன்னேறிக் கொண்டு வாருங்கள் என்று பெண்களுக்கு அறிவுரை செய்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’சிப்பிக்குள் முத்து’ என்ற சீரியலில் நடித்த போது விஷ்ணுகாந்த் என்பவரை காதலித்து நடிகை சம்யுக்தா திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஒரு சில மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். மேலும் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அந்தரங்க விஷயங்கள் உள்பட பல விஷயங்களை குற்றம் சாட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது சம்யுக்தா புதிய கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வேதபுரீஸ்வரர் கோயிலில் பூசணிக்காய், தேங்காய் உடைத்து கார் வாங்கியதற்கு பூஜை போட்ட வீடியோவை பதிவு செய்துள்ள சம்யுக்தா, குரைக்கிற நாய் குறைக்கட்டும், தனியாக ஒரு பெண் சுதந்திரமாக உழைத்து முன்னேறுவது இந்த சமூகத்தில் சாதாரண விஷயம் இல்லை. எனக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி.

பெண்கள் ஒரு இலக்கை நிர்ணயித்து அந்த இலக்கை மட்டும் அடைய முயற்சி செய்யுங்கள், கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வாருங்கள், ஆணாதிக்க நபர்களுக்கு மத்தியில் லேடி பாஸ்ஸாக கெத்து காட்டுங்கள், அதுவே அவர்களுக்கு கொடுக்கும் பதிலடியாக இருக்கும்’ என்று ஆவேசமாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment