12 வயதில் மகன் இருக்கும் நிலையில் சீரியல் நடிகை கர்ப்பம்.. ரசிகர்கள் வாழ்த்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவருக்கு 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் தற்போது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
டிவி சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் காயத்ரி யுவராஜ். இவர் ’மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகம் ஆகிய அதன் பிறகு சில டான்ஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சன் டிவியில் ’தென்றல்’ என்ற சீரியல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து அவருக்கு சில தொலைக்காட்சிகளில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக விஜய் டிவியில் ’சரவணன் மீனாட்சி’ என்ற சீரியல் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது
மேலும் ’தாமரை’ ’மோகினி’ ’பிரியசகி’ ’அழகி’ ’பொன்னூஞ்சல்’ உட்பட பல சீரியல்களில் அவர் நடித்தார். அதுமட்டுமின்றி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் யுவராஜ் - காயத்ரி தம்பதிக்கு 12 வயதில் மகன் இருக்கும் நிலையில் தற்போது தான் 5 மாத கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை காயத்ரி யுவராஜ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments