லுங்கியை மடித்துகட்டி சிஎஸ்கேவுக்கு ஆதரவு கொடுத்த நடிகை! வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

ஐபிஎல் தொடர் போட்டிகளில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் தோனியின் ரசிகர்களும் சரி, திரை நட்சத்திரங்களும் சரி தொடர்ச்சியாக சிஎஸ்கே கொடுத்து வரும் ஆதரவை விட்டு விலகப் போவதில்லை என்பது அவர்களுடைய சமூக வலைதளங்களின் போஸ்ட்டுகளில் இருந்து தெரிய வருகிறது.

குறிப்பாக தல தோனிக்கு தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் ஆதரவளித்து வரும் நிலையில் தொலைக்காட்சி சீரியல் நடிகை தர்ஷாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சிஎஸ்கே பனியன் மற்றும் லுங்கி கட்டி, வீடியோ மற்றும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

சிஎஸ்கே பனியனை அணிந்து லுங்கியை தூக்கி மடித்துக் கொண்டு அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. அதே போல் லுங்கியை தூக்கி மடித்துக் கட்டிக் கொண்டு அவர் நடந்து வரும் வீடியோவையும் சமூக வலைத்தள்னக்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி நடிகை தர்ஷா ஆரம்பத்தில் தொலைக்காட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்தாலும் தற்போது அவர் வில்லி வேடங்களில் கலக்கி வருகிறார். குறிப்பாக ’செந்தூரப்பூவே’ சீரியலில் விதவிதமான காஸ்ட்யூம் மற்றும் நகைகளை அணிந்து வலம் வரும் அவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் பதிவுகளை ரசிப்பதற்கு என்றே இன்ஸ்டாகிராமில் ஒரு கூட்டமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

View this post on Instagram

??Csk??

A post shared by Dharsha (@dharshagupta) on Oct 1, 2020 at 9:59pm PDT