விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய சீரியல் நடிகை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
'முள்ளும் மலரும்’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ’சூப்பர் மாம்’ உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ரியாஸ் என்பவரை நடிகை ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஷாலினி மற்றும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது.
இந்த நிலையில் தனது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
"குரலற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments