விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய சீரியல் நடிகை..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

தமிழ் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு விவாகரத்து கிடைத்ததை போட்டோஷூட் எடுத்து கொண்டாடிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

'முள்ளும் மலரும்’ என்ற தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ’சூப்பர் மாம்’ உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிலையில் ரியாஸ் என்பவரை நடிகை ஷாலினி திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென ஷாலினி மற்றும் அவரது கணவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில் தற்போது விவாகரத்து கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தனது தனக்கு விவாகரத்து கிடைத்துள்ளதை சந்தோஷமாக கொண்டாடும் வகையில் போட்டோஷூட் புகைப்படம் எடுத்து தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

குரலற்றவர்களாக தங்களை உணர்பவர்களுக்கு விவாகரத்து பெற்ற பெண்ணின் செய்தி இது. ஒரு மோசமான திருமணத்தை விட்டுவிடுவது பரவாயில்லை. ஏனென்றால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். ஒருபோதும் குறைவாக உங்களை எண்ண வேண்டாம். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்காகவும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து ஒன்றும் தோல்வியல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க வழிவகுக்கும் திருப்புமுனை. திருமணத்தை விட்டு வெளியேறுவதற்கு மிகப்பெரிய தைரியம் தேவை. தனித்து நில்லுங்கள். எனது துணிச்சலான பெண்கள் அனைவருக்கும் இதை சமர்ப்பிக்கிறேன்.

More News

தண்ணீருக்கடியில் மீன்களை போல் துள்ளி விளையாடும் சம்யுக்தா ஹெக்டே.. பியூட்டி வீடியோ..!

நடிகை சம்யுக்தா ஹெக்டே மாலத்தீவு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில் நேற்று ப்ளூ கலரில் பிகினி உடை அணிந்து கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

மறைந்த பீட்டர்பால் வீட்டில் கட்டுக்கட்டாக பணமா? உறவினர்கள் ஆச்சரியம்..!

நடிகை வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட பீட்டர்பால் வீட்டில் இருந்து கட்டு கட்டாக பணத்தை அவருடைய உறவினர்கள் எடுத்ததாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இன்று மாலை 5 மணிக்கு செம்ம விருந்து.. அஜித்தின் பிறந்த நாளில் போனிகபூர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..

அஜித் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' 'வலிமை' மற்றும் 'துணிவு' ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்.. தலைவர் பதவிக்கு தேர்வு பெற்றவர் இவர் தான்..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பலர் வாக்களித்தனர். மொத்தம் நேற்று 1111 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தகவல்

விஜய் பட பெண் தயாரிப்பாளரின் வேற லெவல் வொர்க் அவுட் வீடியோ.. உடன் இருக்கும் பிக்பாஸ் நடிகை..!

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த பெண் தயாரிப்பாளர் ஜிம்மில் வேற லெவலில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ