close
Choose your channels

9 மாத கர்ப்பிணியான பிரபல சீரியல் நடிகை: வளைகாப்பு புகைப்படங்கள் வைரல்!

Wednesday, November 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல சீரியல் நடிகை ஒருவர் 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வளைகாப்பு புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

சன் டிவியில் ஒளிபரப்பான ’கயல்’ என்ற சீரியலில் ஆனந்தி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை அபி நவ்யா. இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’என்றென்றும் புன்னகை’ என்ற சீரியலில் நடித்து வரும் தீபக்கை காதலித்தார். இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணமான அடுத்த மாதமே அபி நவ்யா கர்ப்பமானார்.

இந்த நிலையில் தற்போது அபி நவ்யா 9 மாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் அபி நவ்யா பகிர்ந்துள்ளார்.

மஞ்சள் சேலையில் அவர் கை நிறைய வளையல்களுடன் இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது .ஏற்கனவே கர்ப்பிணியாக இருக்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களையும் அவர் பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment