சிவகார்த்திகேயன் படங்களில் பணிபுரிந்த அப்பா-மகள்!

  • IndiaGlitz, [Thursday,November 14 2019]

சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ படத்தில் தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஷ்யாம் ஒரு பாடலை பாடியுள்ளார். யுவனின் இசையில் பாடிய அனுபவத்தை தன்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் ஹைபிட்சில் அமைந்த இந்த பாடலை தான் நன்றாக பாடியதாக யுவனிடம் பாராட்டு பெற்றது தனக்கு பெருமையாக இருப்பதாகவும் பேட்டி ஒன்றில் ஷ்யாம் கூறியுள்ளார்.

மேலும் இவருடைய மகள் ரக்‌ஷா, சிவகார்த்திகேயன் நடித்த ‘ரெமோ’ படத்தில் நடித்திருந்ததாகவும், ரக்‌ஷாவை படப்பிடிப்புக்கு அழைத்து சென்றபோது சிவகார்த்திகேயனுடன் நட்பு ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நடிக்கும் படத்தில் ஒரு பாடலை பாடியது தனக்கு மிகுந்த சந்தோஷம் என்றும் ஷ்யாம் கூறியுள்ளார்,

கல்லூரி காலத்தில் இருந்தே தனக்கு பாடகராக வேண்டும் என்பதுதான் கனவு என்றும், ஆனால் எதிர்பாராத விதமாக சீரியல் நடிகராகிவிட்டதாகவும், ஆனால் தற்போது நீண்ட வருடங்கள் கழித்து தன்னுடைய பாடகர் கனவு நனவாகியுள்ளதாகவும் ஷ்யாம் கூறியுள்ளார்.