8 வருட கடின உழைப்பு.... இதனால் வாய்ப்புகள் பறிபோனது....! பிரபல சீரியல் நடிகர் பேட்டி....!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் "வேலைக்காரன்" என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் சபரி. இவர் அண்மையில் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு, தான் கடந்து வந்த பாதை குறித்து பேசியிருந்தார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட சுவாரசியமான தகவல்களை இதில் பார்க்கலாம்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன், விஜய் டிவியில் இண்டர்ன்ஷிப் சேர்ந்து வேலை செய்து, தற்போது அதே சேனலில் சிறந்த சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார் சபரி. புதிய தலைமுறை செய்தி சேனலில் முதன் முறையாக நிகழ்ச்சி இயக்குனராக பணியை துவங்கிய இவர், இதைத்தொடர்ந்து பல தனியார் சேனல்களில் ஆர்ஜே, தொகுப்பாளர் (விஜே)-வாக பணியாற்றியுள்ளார். இதைப்போல பல விளம்பரங்களில் மாடல்-ஆகவும் நடித்துள்ளார். இதற்கிடையே மோட்டிவேஷன் ஸ்பீக்கர்-ஆகவும் தன்னுடைய பணியை சிறப்பாக செய்து வந்துள்ளார்.
சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு முயற்சியை துவங்கிய சபரி, ஆரம்ப காலகட்டத்தில் ஒருசில குறும்படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து "ஸ்மைல் சேட்டை" என்ற யுடியூப் சேனலில், 143 with sabari என்ற வெப்தொடரில் நடித்து வந்தார். இதன்பின் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவை தட்ட "விஐபி 2, துப்பறிவாளன், சைக்கோ, நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நட்பே துணை" போன்ற தமிழ் படங்களில், துணை கதாபாத்திரமாக நடித்துள்ளார்.
சரவணன் மீனாட்சி-ல் ரியோவின் தம்பியாக நடிக்க, பாரதி கண்ணம்மா, பொம்மு குட்டி அம்மாவுக்கு, ராஜா ராணி-2 போன்ற சீரியல்களில் நாயகனாக நடிக்க முதலில் சபரியைத் தான் தேர்வு செய்துள்ளார்கள். டெஸ்ட் ஷூட் எல்லாம் முடிந்த நிலையிலும், வாய்ப்புகள் வேறு சில காரணங்களால் தவறிப்போயுள்ளது. இதன்பின் நம்பிக்கை இழந்த இவருக்கு வேலைக்காரன் சீரியல் தான் புதுமுக ஹீரோவாக இவரை அறிமுகம் செய்து வைத்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிலும் இந்த தொடர் நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், சபரி சினிமா அனுபவங்கள் குறித்து பேட்டியில் உணர்வுப்பூர்வமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com