விருது பெற்ற கையோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு.. குஷியில் சீரியல் நடிகர்..!

  • IndiaGlitz, [Friday,August 23 2024]

சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழாவில் முக்கிய விருதை பெற்ற சீரியல் நடிகர் அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

சன் டிவி, விஜய் டிவி, ஜெயா டிவி, ராஜ் டிவி உள்பட பட தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்தவர் நடிகர் தீபக். குறிப்பாக ’அண்ணி’ ’கீதாஞ்சலி’ ’மலர்கள்’ ’பந்தம்’ ’தென்றல்’ ’திருமதி செல்வ’ம் உள்ளிட்ட சீரியல்களை நடித்தவர் என்பதும் சமீபத்தில் முடிவடைந்த ’தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் கூட முக்கிய கேரக்டரில் நடித்தவர் என்பதும் தெரிந்தது. அது மட்டும் இன்றி ’ஜோடி நம்பர் ஒன்’ உள்பட பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமீபத்தில் விகடன் விருந்து வழங்கும் விழாவில் நடிகர் தீபக்கிற்கு சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. இந்த அதிர்ஷ்டம் தான் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் அவரது ஆடிஷன் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக தீபக் தேர்வு செய்யப்பட்டாலும் அதில் கலந்து கொள்வது குறித்து தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.