பிரபல சீரியல் நடிகையை விவாகரத்து செய்த நடிகர்.. செட்டில்மென்ட் முடிந்ததாக அறிவிப்பு..!
- IndiaGlitz, [Sunday,December 22 2024]
பிரபல சீரியல் நடிகையை விவாகரத்து செய்த சீரியல் நடிகர் ஈஸ்வர், நாங்கள் இருவரும் முறைப்படி பிரிந்து விட்டோம் என்றும் செட்டில்மென்ட் முடிந்துவிட்டது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
‘தேவதையை கண்டேன்’ உள்பட பல சீரியல்களில் நடித்த ஈஸ்வர், சீரியல் நடிகை ஜெயஸ்ரீயை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஜெயஸ்ரீ, ஈஸ்வர் தன்னை கொடுமைப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ஈஸ்வர் கைதாகி பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் மாறி மாறி மீடியாக்களிலும் யூடியூப் சேனல்களிலும் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஈஸ்வர் தனது சமூக வலைதள பக்கத்தில், நானும் ஜெயஸ்ரீயும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். செட்டில்மென்ட் எல்லாம் முடிந்து விட்டது. இனி என் விருப்பப்படி வாழ்க்கையை வாழ உள்ளேன். இனிமேல் முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறேன். இந்த சவாலான காலகட்டத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த நண்பர்களுக்கும் கடவுளுக்கும் என் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், விவாகரத்து தொடர்பாக எந்த ஒரு பேட்டியும் அளிக்க மாட்டேன். ஐந்தாண்டு கால போராட்டம் சோதனையான காலகட்டமாக இருந்தது. அதிலிருந்து தற்போது மீண்டு விட்டேன். எங்கள் முடிவுக்கு மதிப்பளியுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து நடிகை ஜெயஸ்ரீ இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.