'மெர்சல்' முதல் காட்சிக்கு 'விவேகம்' பட நடிகருக்கு அழைப்பு

  • IndiaGlitz, [Thursday,October 05 2017]

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கியுள்ள 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது சென்சாருக்கு செல்ல தயார் நிலையில் உள்ளது. இந்த படத்தின் டைட்டில் வழக்கின் தீர்ப்பு நாளை வெளிவந்தவுடன் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என தெரிகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் ரெக்ஸ் சினிமாஸ் திரையரங்கில் 'கபாலி', 'பாகுபலி 2' படங்களுக்கு பின்னர் 'மெர்சல்' திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையிடப்படுகிறது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த திரையரங்கில் 'மெர்சல்' படத்தின் முதல் காட்சியை பார்க்க பிரபல ஹாலிவுட் நடிகர் செர்ஜ் குரோசன் (Serge Crozon) அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் தல அஜித்தின் 'விவேகம்' படத்தில் மைக் என்ற கேரக்டரில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கார்த்திக்-கவுதம் கார்த்திக் பட நாயகி அறிவிப்பு

கவுதம் கார்த்திக் நடித்த 'ஹரஹர மகாதேவகி' திரைப்படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அபாரமான வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இயக்குனர் திரு இயக்கவுள்ளதாகவும்

உதயநிதி ஸ்டாலினை நிமிர வைத்த மோகன்லால்

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'இப்படை வெல்லும் திரைப்படம் சென்சார் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கி வருகிறார்.

புதிய படங்கள் வெளியீடு இல்லை என்ற முடிவு ஏன்? விஷால் விளக்கம்

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியுடன் மாநில அரசின் புதிய கேளிக்கை வரியான 10% வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 6ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை

தாஜ்மஹாலை பின்னுக்கு தள்ளிய மீனாட்சி அம்மன் கோவில்: தமிழனின் கெத்து

தாஜ்மஹால் மற்றும் உலகின் பணக்கார கோவில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே தூய்மையான கோவிலாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

'மெர்சல்' டைட்டில் வழக்கு. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள 'மெர்சல்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.