செப்.28ல் 5 படங்கள் ரிலீஸ்.. ஒரு படம் திடீரென பின்வாங்கியதால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Tuesday,September 12 2023]

செப்டம்பர் 28ஆம் தேதி 5 திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 28ஆம் தேதி ஜெயம் ரவி நடித்த ’இறைவன்’ ராகவா லாரன்ஸ் நடித்த ’சந்திரமுகி 2’ சித்தார்த் நடித்த ’சித்தா’ ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ மற்றும் விஜய் ஆண்டனி நடித்த ’ரத்தம்’ ஆகிய ஐந்து திரைப்படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்படி விஜய் ஆண்டனியின் ’ரத்தம்’ திரைப்படம் இந்த போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. இந்த படம் அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அக்டோபர் 19ஆம் தேதி விஜய்யின் ’லியோ’ திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ’ரத்தம்’ படம் தியேட்டரில் 13 நாட்கள் மட்டுமே ஓட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிஎஸ் அமுதன் இயக்கத்தில், கண்ணன் இசையில், விஜய் ஆண்டனி, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.