விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணையும் பிரபல நடிகர்?

  • IndiaGlitz, [Friday,May 04 2018]

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன், சூசன் என்பவரை கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ரிஹான், ரிதான் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2014ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். இரண்டு குழந்தைகளும் சூசனிடம் வளர்ந்து வந்தனர்

சூசனிடம் இருந்து ஹிருத்திக் ரோஷன் பிரிந்து வாழ்ந்தாலும் அவ்வப்போது மகன்களை பார்க்க சூசன் வீட்டிற்கு சென்று வந்தார். அதுமட்டுமின்றி மகன்களை வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்து செல்லும்போது சூசனும் உடன் சென்றார். இதனால் இருவரும் மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஹிருத்திக் மற்றும் சூசன் ஆகிய இருவரும் தனியாக ஹோட்டல், தியேட்டர், கடற்கரை, வெளிநாடு செல்வதாகவும் இருவரிடத்தில் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற ஹிருத்திக் ரோஷனின் இரண்டாவது மகன் ரிதானின் 10வது பிறந்த நாளில் ஹிருத்திக் கலந்து கொண்டதாகவும் இந்த விழாவின்போது ஹிருத்திக்-சூசன் மனம் விட்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. எனவே விவாகரத்து பெற்ற இருவரும் மீண்டும் இணைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாலிவுட் திரையுலகம் கூறுகின்றது.