மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றம்… தனி நிறுவனம் அமைத்து தமிழக அரசு அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
அதிமுக எப்போதும் சிறுபான்மையினர் நலனுக்காகவே செயல்படும் என்றும் ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக இயங்காது என்றும் தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது மொழிவாரி சிறுபான்மையினர் முன்னேற்றத்தைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட தமிழக அரசு புது ஆணை ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
அதில் மொழிவாரி சிறுபான்மையினர் நலனுக்காக தனி நிறுவனம் ஒன்று உருவாக்கி அதன்மூலம் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான உத்தரவாதம் அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்து உள்ளார். இதற்காக Tamilnadu Lingustic Minorities Social and Economics Development Corporation – TALMEDCO என்ற அமைப்பை தமிழக முதல்வர் ஏற்படுத்தி உள்ளார்.
பன்மைத்துவம் கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஒரு மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் வாழும் மொழியினர் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் முதன் முறையாக மொழிவாரி சிறுமைபான்மையினர் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு தனி நிறுவனம் ஒன்றை தமிழக முதல்வர் ஏற்படுத்தி உள்ளார்.
இதன் மூலம் வேலை வாய்ப்பை ஏற்படுத்திடவும், தொழில் முனைவோர்களாக ஊக்கப்படுத்தவும் தொழில் தொடங்கிட கடன் உதவி வழங்கிடவும் இந்த நிறுவனம் வழி வகை செய்யும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. தேசிய சிறுபான்மையினர் முன்னேற்றம் மற்றும் நிதி கழகத்தின் வழிகாட்டுதலின்படி மொழிவாரி சிறுபான்மையினருக்கு கடன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது. மேலும் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்த மொழிவாரி சிறுபான்மையினர் நல நிறுவனம் செயல்படும் என்றும் தமிழக அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments