சூர்யா-விக்னேஷ்சிவன் படத்தில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Friday,November 25 2016]


'எஸ் 3' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக முதன்முதலில் கீர்த்திசுரேஷ் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் சுரேஷ் மேனன் நடித்து வருகிறார் என்பதை சமீபத்தில் பார்த்தோம். இதேபோல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் பழம்பெரும் காமெடி நடிகர் செந்தில் தற்போது இந்த படத்தில் இணைந்துள்ளார்.
சபாரி சூட் உடன் செந்தில் இந்த படத்தின் குழுவினர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளிவந்துள்ளது. சுரேஷ் மேனன், செந்தில் இணைந்ததை அடுத்து வேறு நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

நளினி-பிரியங்கா சந்திப்பில் என்ன நடந்தது? சுயசரிதையில் வெளியான அதிர்ச்சி உண்மைகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியின்...

ஜி.வி.பிரகாஷின் புத்தாண்டு விருந்து குறித்த முக்கிய தகவல்

ஜி.வி.பிரகாஷ், நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கிய 'கடவுள் இருக்குறான் குமாரு' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

லிங்குசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பது உண்மையா?

சமீபத்தில் வெளியான சிம்புவின் 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்ததை அடுத்து வெற்றிகரமாக....

கன்னட ரீமேக் திகில் படத்தில் ஜோதிகா?

பிரபல நடிகையும், நடிகர் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் கடந்த ஆண்டு நடித்த '36 வயதினிலே'...

'அவதார் 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் மெகா ஹிட்...