சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் சூடான அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சூர்யா தற்போது சுதாகொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'சூரரைப் போற்று' படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது சூடான அப்டேட் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் ஓப்பனிங் பாடலை ஏகாதேசி என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் பாடி இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
Yes the opening track of #SooraraiPottru @Suriya_offl is a dance folk number penned by yegadasi and sung by Senthil Ganesh ???? ... ??✨?????? #sudhakongra @rajsekarpandian @2D_ENTPVTLTD pic.twitter.com/zmriP8M9ym
— G.V.Prakash Kumar (@gvprakash) July 25, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments