சூர்யாவின் 'சூரரை போற்று' படத்தின் சூடான அப்டேட்

  • IndiaGlitz, [Thursday,July 25 2019]

சூர்யா நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சூர்யா தற்போது சுதாகொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'சூரரைப் போற்று' படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தற்போது சூடான அப்டேட் ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சூர்யாவின் ஓப்பனிங் பாடலை ஏகாதேசி என்பவர் எழுதி இருப்பதாகவும் இந்த பாடலை விஜய் டிவி புகழ் செந்தில் கணேஷ் பாடி இருப்பதாகவும் ஜிவி பிரகாஷ் தனது சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த தகவல் சூர்யாவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. சூர்யாவுக்காக செந்தில் கணேஷ் பாடிய பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், கருணாஸ், மோகன்பாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

அசராமல் முத்தம் தந்தே அலங்காரம் செய்ய வேண்டும்: 'அகலாதே' பாடல் வரிகள்

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியாகவிருக்கும்

'பொன்னியின் செல்வன்' படத்தில் இணைந்த மேலும் இரண்டு பிரபல நடிகைகள்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள மல்டி ஸ்டார் திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்துள்ளனர்.

பாத்ரூமில் வழுக்கி விழும் பட்டாக்கத்தி பைரவர்கள்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் மாணவர்கள் இருவர் பட்டா கத்தியுடன் ஒரு அரசு பேருந்தில் ஏறி அங்கிருந்த சக மாணவர் ஒருவரை சரமாரியாக வெட்டிய சிசிடிவி

அஜித்தை சந்தித்தால்... ஆசையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யாராய்

அஜித்தை நேரில் சந்தித்தால் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புவதாக முன்னாள் உலக அழகியும் நடிகையுமான ஐஸ்வர்யாராய் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

மிர்ச்சி சிவாவுக்கு கிடைத்த புரமோஷன்

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய 'சென்னை 600028' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் 'தமிழ்ப்படம்', ''கலகலப்பு', 'தில்லுமுல்லு', 'உள்பட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் மிர்ச்சி சிவா.