வாழைப்பழ வடிவில் கேக். வித்தியாசமாக கொண்டாடப்பட்ட செந்தில் பிறந்த நாள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் சினிமாவில் ஒரே ஒரு வாழைப்பழத்தை வைத்து காமெடி செய்து அந்த காமெடி ஒரு தலைமுறைக்கும் மேல் தொடர்ந்து மக்களை சிரிக்க வைத்து கொண்டிருப்பது என்றால் அது கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி-செந்தில் வாழைப்பழ காமெடிதான். இன்று கூட தொலைக்காட்சியில் இந்த காமெடி ஒளிபரப்பப்பட்டால் குடும்பத்தோடு சிரித்து மகிழ்வது உண்டு.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகர் செந்தில், சூர்யா, கீர்த்திசுரேஷ் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார்.
நேற்று செந்தில் பிறந்த நாளை அடுத்து படக்குழுவினர் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக இரண்டு வாழைப்பழங்கள் வடிவில் ஒரு கேக்கை தயார் செய்து அவருடைய பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்.
ஒரு சீனியர் நகைச்சுவை நடிகரின் பிறந்த நாளை இளம் நடிகர்கள் இணைந்து வித்தியாசமாக கொண்டாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments