'குழந்தைகள் முன்னேற்ற கழகம்': செந்தில் உடன் சேர்ந்து யோகிபாபு ஆரம்பித்த அரசியல் கட்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்பது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை புதிது இல்லை என்பதும் மக்கள் திலகம் எம்ஜிஆர் முதல் தளபதி விஜய் வரை பலர் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளனர் என்பது தெரிந்தது.
அந்த வகையில் காமெடி நடிகர்களான செந்தில் மற்றும் யோகி பாபு ஆகிய இருவரும் ’குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த டைட்டிலில் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர் என்ற விளம்பரம் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தேர்தல் நேரத்தில் திடீரென யோகி பாபு மற்றும் செந்தில் இணைந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ’குழந்தைகள் முன்னேற்ற கழகம்’ என்ற டைட்டில் இருப்பதை பார்த்து இது உண்மையில் திரைப்படமா? அல்லது அரசியல் கட்சி ஆரம்பமா? என்று யோசிக்கும் அளவுக்கு படக்குழுவினர் இந்த போஸ்டரை வடிவமைத்துள்ளனர்
இந்த படத்தை சங்கர் தயால் என்பவர் இயக்கி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ’சகுனி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பதும் அந்த படமும் அரசியல் கலந்த காமெடி படம் என்பது தெரிந்தது
இந்த படத்தின் போஸ்டரின் பின்னணியில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் இருப்பதை பார்க்கும்போது நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த அரசியல் படம் என தெரிகிறது. மேலும் செந்தில், யோகிபாபு அரசியல் பிரமுகர்களாக இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவது போன்ற காட்சிகளும் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Here's the First look poster of #KuzhanthaigalMunnetraKazhagam 🌟#KMKMovie#Senthil @iYogiBabu @shankardayaln @Meenakshia96013 @Arunkumars414431 @ARichardkevin @subbu6panchu @Lizzieantony@iamakalya @nannanpk@kailashsatana @ntalkies_offl @teamaimpr pic.twitter.com/MvLlHwOcu2
— Yogi Babu (@iYogiBabu) March 25, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments