மாடர்ன் டிரெஸ், ஃப்ரி ஹேர்: திடீரென லுக் மாறிய ராஜலட்சுமி - செந்தில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் திடீரென மாடர்ன் டிரெஸ்ஸில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில் ஆகிய இருவருமே கலந்து கொண்டனர் என்பதும் இதில் செந்தில் டைட்டில் பட்டம் வென்றார் என்பதும் தெரிந்ததே. அதன்பின்னர் விஜய் டிவியில் நடைபெற்று வரும் பல நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமின்றி திரைப்படங்களிலும் இருவரும் பாடி வருகின்றனர்.
செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவருமே தமிழ் கலாச்சாரப்படி வேட்டி சேலை காஸ்ட்யூம் அணிந்துதான் பெரும்பாலும் தோற்றம் அளிப்பார்கள். இந்த நிலையில் அவ்வப்போது தங்களது போட்டோ ஷூட் புகைப்படங்களை ராஜலட்சுமி தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றார்.
இந்த நிலையில் முதல் முறையாக செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரும் மாடர்ன் உடையில் கலக்கியுள்ளனர். ராஜலட்சுமி மாடன் உடையில், ஃப்ரீ ஹேர் தோற்றத்துடனும், செந்தில் கோட் சூட்டுடனும் இந்த போட்டோஷூட் புகைப்படங்களில் உள்ளனர். இந்த பதிவில், ‘காற்றோடு வந்த காதல் மொழியில் நான் காத்தாடியானேன்’ என்று ராஜலட்சுமி பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments