கவர்னருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய அரசு உயரதிகாரி கைது

  • IndiaGlitz, [Saturday,December 31 2016]

புதுச்சேரி கவர்னராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி கடந்த சில மாதங்களாக தனது அதிரடி நடவடிக்கை மூலம் புதுச்சேரியை முற்றிலும் மாற்றி வருகிறார்.

கவர்னர் என்றால் பதவிப்பிரமாணம் மட்டுமே செய்துவிட்டு அரசு கைகாட்டும் இடங்களில் கையெழுத்து போடும் ஒரு பொம்மை பதவி என்பதை மாற்றி இவரே நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.

அதுமட்டுமின்றி ”வளமான பாரதம்” என்ற வாட்ஸ்அப் குழுவை கிரண் பேடி உருவாக்கினார். கிரண் பேடி அட்மினாக இருக்கும் அந்தக் குழுவில் தலைமைச் செயலர், துறை செயலாளர்கள், காவல்துறை ஐ.ஜி மற்றும் உயர் அதிகாரிகள் என அனைத்து துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாட்ஸ்அப் குழுவில் நேற்று திடீரென ஆபாச வீடியோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழ அதிர்ச்சி அடைந்த கிரண்பேடி இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் இந்த வீடியோவை அனுப்பியவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது.

உடனடியாக அவரை நேரில் அழைத்த கிரண்பேடி, அவரை கண்டித்ததோடு சஸ்பெண்ட் செய்தார். அதுமட்டுமின்றி கவர்னரின் உத்தரவின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

சசிகலாவின் அரசியல் வாழ்க்கை ஜனவரியில் முடிந்துவிடும். சுப்பிரமணியன் சுவாமி

அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இன்று சசிகலா நடராஜன் அதிமுகவின் பொதுச்ச்செயலாளராக பதவி...

குரு யேசுதாசுக்கு செலுத்தும் காணிக்கைதான் இந்த பாதபூஜை. எஸ்பி பாலசுப்பிரமணியம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் திரையுலகிற்கு காலடி எடுத்து வைத்து ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது...

சசிகலாவுக்கு பொதுச்செயலாளர் பதவியா? ஜெ. நினைவிடத்தில் விஷம் குடித்த அதிமுக தொண்டர்

அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக சசிகலா தேர்வு செய்யப்பட்ட போதிலும்...

சசிகலாவின் முதல் பேச்சு : ஜெயலலிதா காட்டிய வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்

சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா...

சசிகலாவுக்கு வழங்கப்பட்ட புதிய புரட்சி பட்டம்

புரட்சித்தலைவர் என்ற பட்டம் எம்.ஜி.ஆருக்கும், புரட்சி தலைவி என்ற பட்டம் ஜெயலலிதாவுக்கும்...