கவர்னருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய அரசு உயரதிகாரி கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
புதுச்சேரி கவர்னராக சமீபத்தில் பொறுப்பேற்ற இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி கடந்த சில மாதங்களாக தனது அதிரடி நடவடிக்கை மூலம் புதுச்சேரியை முற்றிலும் மாற்றி வருகிறார்.
கவர்னர் என்றால் பதவிப்பிரமாணம் மட்டுமே செய்துவிட்டு அரசு கைகாட்டும் இடங்களில் கையெழுத்து போடும் ஒரு பொம்மை பதவி என்பதை மாற்றி இவரே நேரடியாக மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.
அதுமட்டுமின்றி ”வளமான பாரதம்” என்ற வாட்ஸ்அப் குழுவை கிரண் பேடி உருவாக்கினார். கிரண் பேடி அட்மினாக இருக்கும் அந்தக் குழுவில் தலைமைச் செயலர், துறை செயலாளர்கள், காவல்துறை ஐ.ஜி மற்றும் உயர் அதிகாரிகள் என அனைத்து துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வாட்ஸ்அப் குழுவில் நேற்று திடீரென ஆபாச வீடியோக்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து விழ அதிர்ச்சி அடைந்த கிரண்பேடி இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையில் இந்த வீடியோவை அனுப்பியவர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிவக்குமார் என்பது தெரிய வந்தது.
உடனடியாக அவரை நேரில் அழைத்த கிரண்பேடி, அவரை கண்டித்ததோடு சஸ்பெண்ட் செய்தார். அதுமட்டுமின்றி கவர்னரின் உத்தரவின்பேரில் அவர் கைது செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை செய்ததாகவும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com