தமிழ் திரையுலகின் சீனியர் நடிகர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்

  • IndiaGlitz, [Friday,April 30 2021]

தமிழ் திரை உலகிற்கு கடந்த சில நாட்களாக போதாத காலம் என்பதால் பிரபலங்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக பிரபல நடிகர் விவேக், பிரபல இயக்குனர் தாமிரா ஆகியோர் கடந்த சில நாட்களில் அடுத்தடுத்து காலமான நிலையில் இன்று அதிகாலை இயக்குநர் கேவி ஆனந்த் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்தார்

அடுத்தடுத்து திரையுலகில் பிரபலங்கள் உயிரிழந்து வருவது திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி தமிழ் சீனியர் நடிகர் செல்லத்துரை என்பவர் காலமானார். அவருக்கு வயது 84. நேற்று இரவு அவர் தனது இல்லத்தில் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சீனியர் நடிகர் செல்லத்துரை அவர்கள் விஜய் நடித்த ’தெறி’ ‘கத்தி’ உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் செல்லத்துரை அவர்களின் மறைவை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

More News

வதந்தியை நம்பி மூக்கில் எலுமிச்சை சாறு செலுத்திய ஆசிரியர் பரிதாப பலி!

மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தினால் ஆக்சிஜன் அளவு அதிகம் கிடைக்கும் என்ற வதந்தியை நம்பி ஆசிரியர் ஒருவர் மூக்கு வழியே எலுமிச்சைசாறு செலுத்தியதால் பலியான சம்பவம்

விதவையான கேமரா கேவிக்கேவி அழுகிறது: கே.வி.ஆனந்த் மறைவு குறித்து வைரமுத்து!

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கேவி ஆனந்த் அவர்கள் இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த செய்தி திரையுலகினருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.

அடுத்த 10 நாட்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும்: சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை சுனாமி போல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது என்பதும் நேற்று மட்டும் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா

பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்தார்: அதிர்ச்சியில் திரையுலகம்

தமிழ் திரையுலகிற்கு கடந்த சில மாதங்களாகவே சோதனையான காலமாக உள்ளது. எஸ்பிபி, விவேக் உட்பட பல பிரபலங்கள் தொடர்ச்சியாக மறைந்து வரும் நிலையில்

தடுப்பூசி போட 69 வயது மனைவியை தூக்கி சென்ற 76 வயது முதியவர்!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.