நான் அப்பா ஆயிட்டேன்: உணர்ச்சிவசப்பட்ட செண்ட்ராயன்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவராகிய செண்ட்ராயன், அப்பாவி போல் தெரிந்தாலும் பல விவரமானவர்களை மீறி மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார். 70 நாட்களையும் தாண்டி அவர் பிக்பாஸ் வீட்டில் நீடித்திருப்பதே ஒரு பெரிய விஷயம் தான்.
இந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று செண்ட்ராயன் மனைவி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். செண்ட்ராயன் மனைவி கர்ப்பமாகியுள்ளது குறித்து ஏற்கனவே செய்தி வெளியாகியிருந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் செண்ட்ராயனுக்கு அது தெரியாது.
இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவருடைய மனைவி 'நீங்கள் அப்பாவாகிவிட்டீர்கள்' என்று கூறியதும் செண்ட்ராயன் உணர்ச்சிவசப்பட்டு 'நான் அப்பா ஆகிட்டேன்' என்று கூறியவாறு ஆனந்தக்கூத்தாடினார். செண்ட்ராயனின் வெகுளிதனமான குணம், கள்ளங்கபடம் இல்லாத மனம் ஆகியவை அவருக்கு பிக்பாஸ் 2 டைட்டிலை பெற்றுத்தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/sptgNJs8A4
— Vijay Television (@vijaytelevision) August 30, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com