ரைசாவை கல்யாணம் செய்ய செண்ட்ராயன் போட்ட நிபந்தனை
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போதுதான் ஓரளவுக்கு சூடு பிடித்துள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொருவரின் உண்மை முகம் தற்போதுதான் தெரிய வந்துள்ளதால் சுவாரஸ்யமும் கொஞ்சம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா ஆகியோர் இன்று பிக்பாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த 'பியார் பிரேமா காதல்' திரைப்படம் இன்று வெளியாகிவுள்ளதால் அந்த படத்தின் புரமோஷனுக்காக இன்று இருவரும் பிக்பாஸ் இல்லத்திற்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ரைசாவை பார்த்து செண்ட்ராயன், 'உன்னை பார்த்ததில் இருந்து நான் சாப்பிடவில்லை, உன்னை மாதிரி அழகாக மாற நான் முயற்சி செய்கிறேன். தயவுசெய்து என்னை நீ கல்யாணம் பண்ணிக்கோ, ஆனால் ஒரு கண்டிஷன். என் மனைவியிடம் நீதான் பெர்மிஷன் வாங்க வேண்டும்' என்று கூறுகிறார்.
வழக்கமாக புரமோ வீடியோவிற்கும் நிகழ்ச்சிக்கும் சம்பந்தமே இருக்காது. அந்த வகையில் இந்த புரமோ வீடியோ எந்த அளவுக்கு உண்மை என்பதை இன்று இரவு நிகழ்ச்சியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
மிஸ்டர் சென்ராயன் பிரமாதம்! ???? #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss @Vivo_India pic.twitter.com/4fgyT6u8I3
— Vijay Television (@vijaytelevision) August 10, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments