விஜயலட்சுமி அதிரடி: செண்ட்ராயனுக்கு தேவையா இந்த அவமானம்?

  • IndiaGlitz, [Monday,August 27 2018]

பிக்பாஸ் வீட்டின் புதுவரவான விஜயலட்சுமி நேற்று முன் தினம் கமல்ஹாசன் முன் போட்டியாளர்கள் குறித்த தனது கணிப்பை தெரிவித்தார். பார்வையாளர்களின் மனநிலையை பிரதிபலித்தது போல் இருந்தது அவரது கணிப்பு

மேலும் விஜயலட்சுமி வீட்டிற்குள் நுழைந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் இன்னும் அவரது உண்மையான சுயரூபமும் தெரியவில்லை. இதுவரை அடக்கி வாசித்து கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் கிச்சன் டீமில் உள்ள விஜயலட்சுமியிடம் செண்ட்ராயன் சென்று, 'மும்தாஜ் தோசை கேட்டால் நமக்கு பயன்படுத்தும் எண்ணெயை போட வேண்டாம், அவருக்கு என்று தனியாக இருக்கும் எண்ணெயில் தோசை போட்டு கொடுக்கவும் என்று செண்ட்ராயன் அறிவுரை கூற அதற்கு விஜயலட்சுமி, 'நான் இங்கு யாருக்கும் அசிஸ்டெண்ட் இல்லை, நான் போட்டியாளர். அவங்க எப்ப வருவாங்களோ அதுவரை காத்திருந்து அவங்களுக்கு தோசை போட்டு கொடுக்க முடியாது. தேவையென்றால் அவங்களே போட்டு சாப்பிடட்டும், அல்லது நீங்கள் போட்டு கொடுங்கள். என்னால் எப்போதுமே கிச்சனில் இருக்க முடியாது, எனக்கும் தனிப்பட்ட வேலை உள்ளது' என்று பதிலடி கொடுக்க, இந்த அவமானம் நமக்கு தேவையா என்ற ரீதியில் செண்ட்ராயன் அமைதியாக இடத்தை காலி செய்கிறார்.

மகத்தின் வெளியேற்றம், யாஷிகா-ஐஸ்வர்யாவின் அமைதி நேற்று முதல் ஆரம்பித்துள்ள நிலையில் விஜயலட்சுமி மெல்ல மெல்ல தனது சுயரூபத்தை காட்ட தொடங்கிவிட்டதால் இனி பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.