'செம்பருத்தி' சீரியல் நடிகருக்கு பெண் குழந்தை: வர்ணித்து எழுதிய கவிதை வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று செம்பருத்தி என்பதும் இந்த தொடர் லட்சக்கணக்கான ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவர் தனது மகளுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதிய கவிதை வைரலாகி வருகிறது.
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பாக கார்த்திக், ஷபானா, பிரியாராமன் உள்ளிட்டோர் இந்த சீரியலில் தங்கள் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே
இந்த சீரியலில் அருண் என்ற கேரக்டரில் அதாவது ஆதியின் சகோதரராக நடித்திருந்தவர் விஜே கதிர். இவர் ஆண்டு ஜூலை மாதம் சிந்து என்பவரை திருமணம் செய்த நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் தனது மகளுக்காக எழுதிய கவிதை வைரலாகி வருகிறது. அந்த கவிதை இதோ:
ஆயிரம் உறவு என்னை அழைத்தாலும்
"அப்பா" என்ற ஒற்றை வார்த்தையில்
என்னை கட்டி இழுக்க வந்த
"ஆசைமகளே"
ஆயுள் முழுவதும் உந்தன் முழுமதி முகத்தில்
மலரும் புன்னகை கண்டே
எந்தன் நாட்கள் நகர வேண்டுமடி வைரமே
இந்த பதிவில் விஜே கதிர் மேலும் கூறியபோது, ‘என் இளவரசி! இன்று மகள்கள் தினத்தை கொண்டாடும் ஒவ்வொரு தந்தைக்கும் வாழ்த்துக்கள். நானும் என் மகளுடன் மகள்கள் தினத்தை கொண்டாடுகிறேன். ஆம்...,எங்கள் வீட்டிற்கு அழகான இளவரசி வந்துள்ளார். அவர் எங்கள் வீட்டை அலங்கரித்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com