'செம போத ஆகாதே' படத்தின் ரன்னிங் டைம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள 'செம போத ஆகாதே' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டீசர், டிரைலர் மற்றும் பாடல்கள் இணையதளத்தில் நல்ல ஹிட்டாகியுள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படம் 133 நிமிடங்கள் மட்டுமே ஓடும் வகையில் உள்ளது. அதாவது 2 மணி நேரம் 13 நிமிடங்கள் மட்டுமே இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆகும். அந்த அளவு படத்தை ட்ரிம் செய்துள்ள எடிட்டர் பிரவீன் கே.எல். அவர்களின் பணி எந்த அளவுக்கு சிறப்பாக உள்ளது என்பதை வரும் வெள்ளியன்று இந்த படத்தின் திரை விமர்சனத்தில் பார்ப்போம்
அதர்வா, மிஷ்தி, அர்ஜை, அனைகா சோட்டி, ஜான்விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையில் கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை அதர்வா தயாரித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com