செல்வராகவனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். அவரது ’காதல் கொண்டேன்’ ’ஆயிரத்தில் ஒருவன்’ ’புதுப்பேட்டை’ போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் சமீபத்தில் அவர் இயக்கிய ஒரு சில திரைப்படங்கள் வெற்றியடையவில்லை. அது மட்டுமின்றி அவரது இயக்கத்தில் சந்தானம் நடித்த ’மன்னவன் வந்தானடி’ மற்றும் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீசுக்கு தயாராகி ஒருசில வருடங்களாகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அடுத்த படத்திற்காக தான் தயாராகி விட்டதாகவும் அடுத்த படத்தின் கதையை எழுத தொடங்கி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது

செல்வராகவனின் அடுத்த படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியாகிய நிலையில் தற்போது அவர் எழுதிவரும் கதை ’புதுப்பேட்டை 2’ படமாக இருக்கலாம் என்று கருத்து கூறி வருகின்றனர். அதேபோல் இன்னும் ஒரு சிலர் செல்வராகவனின் அடுத்த படம் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ தான் என்று கூறி வருகின்றனர். செல்வராகவன் தனது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே தெரிவிக்கும் வரை பொறுமை காப்போம்