முறுக்கு மீசை… வெள்ளைத் தாடியுடன் இயக்குநர் செல்வராகவன்… வைரலாகும் புது கெட்டப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பல ஹிட் திரைப்படங்களைக் கொடுத்த இயக்குநர் செல்வராகவன் முதல் முறையாக அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் “சாணிகாயிதம்” திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கிய நிலையில் தற்போது இயக்குநர் செல்வராகவனின் புது கெட்டப் புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
அதில் முறுக்கு மீசையுடன், வெள்ளைத் தாடி வைத்துக்கொண்டு இயக்குநர் செல்வராகவன் படு அசத்தலாக காட்சியளிக்கிறார். இதற்குமுன்பு “சாணிகாயிதம்“ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் போஸ்டரில் அப்பாவியாக இருக்கும் அவர் தற்போது விரைப்பாக போஸ் கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படத்தை தற்போது நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படத்தொகுப்பு பிரிவில் தேசிய விருதை வென்ற திரைப்படம் “ஆரண்யக்காண்டம்”. இந்தத் திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர்தான் சாணிகாயிதம் திரைப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். இதைத்தவிர இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான “இறுதிச்சுற்று“ திரைப்படத்தின் வசனக் கர்த்தாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் அருண் மாதேஸ்வரன், இயக்குநர் செல்வராகவன், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்துள்ள “சாணிகாயிதம்” திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout