நாங்க தமிழச்சிங்க: செல்வராகவன் எழுதிய கவிதை

  • IndiaGlitz, [Saturday,May 05 2018]

பிரபல இயக்குனர் செல்வராகவன் ஏற்கனவே 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது சூர்யா நடித்து வரும் 'NGK' என்ற படத்தை  இயக்கி வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்திசிங் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் 'நாங்க தமிழச்சிங்க' என்ற கவிதையை எழுதியுள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'தாய்மொழியை வெறித்தனமாய் நேசிக்கும் சகோதரிகளை பற்றி யோசித்த போது தோன்றிய வரிகள் என்று குறிப்பிட்டு ஒரு கவிதையை பதிவு செய்துள்ளார். அந்த கவிதை இதோ:

புல் பூண்டு பூ கூட தமிழ் பேசும்ங்க..
எங்க கண்ணாடி முகம் இல்ல மொழி காட்டும்ங்க..
மொறத்தால புலியடிச்சோம் கதையில்லைங்க..
அது நெஜம்தானுங்க!
நாங்க தமிழச்சிங்க!

இந்த கவிதையை அடுத்து ''பிடித்தால் சரி. பிழையெனில் மன்னிக்கவும்'' என்றும் செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார். இந்த கவிதைக்கு ஆயிரக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்துள்ளது