'பிரேமம்' படத்தை ரீமேக் செய்வாரா செல்வராகவன்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'பிரேமம்' திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக சென்னையில் தமிழ் படங்களுக்கு இணையான 150 நாட்களுக்கும் மேல் ஓடி, மாபெரும் வசூலை கொடுத்தது.
இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பிரபல இயக்குனர் செல்வராகவன், படக்குழுவினர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 'பிரேமம்' திரைப்படம் தனது மனதை கவர்ந்த திரைப்படம் என்றும் குறிப்பாக நிவின்பாலி நடிப்பு, படத்தின் இசையும் மிகவும் அபாரம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது குறித்து இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் மற்றவர்கள் முயற்சிக்க தேவையில்லை என்றும் செல்வராகவன் கூறியுள்ளார்.
தனுஷ் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் செல்வராகவன் இயக்கவுள்ள படம் 'பிரேமம்' படத்தின் ரீமேக் ஆக இருக்கும் என வெளிவந்த செய்திக்கு செல்வராகவனின் இந்த கருத்தே பதிலாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com