செல்வராகவனின் சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்.. 'நான் ரெடி' என அறிவித்த த்ரிஷா..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் செல்வராகவன் தான் இயக்கிய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க விருப்பம் தெரிவித்த நிலையில் அந்த படத்தில் நாயகி ஆக நடித்த த்ரிஷா ’நான் ரெடி’ என தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் Aadavari Matalaku Arthale Verule என்ற தெலுங்கு படம். வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான இந்த படம் தான் தமிழில் தனுஷ், நயன்தாரா நடிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ’யாரடி நீ மோகினி’ என்ற படமாக உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது இந்த படம் 15 ஆண்டுகளுக்கு முன்பே 30 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை தான் பார்த்ததாகவும் வெங்கடேஷ் மற்றும் த்ரிஷாவுடன் பணிபுரிந்த இனிமையான ஞாபகம் வந்ததாகவும் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
செல்வராகவனின் இந்த டிவிட்டுக்கு பதில் அளித்த த்ரிஷா ’நான் ரெடி’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? வெங்கடேஷ் மற்றும் த்ரிஷா மீண்டும் நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
I’m ready @selvaraghavan 😝 https://t.co/9DCojSHe3u
— Trish (@trishtrashers) September 10, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments