'தல 59' படம் குறித்து செல்வராகவன் கருத்து

  • IndiaGlitz, [Saturday,December 15 2018]

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வெளியாக இன்னும் சுமார் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படமான 'தல 59' படத்தின் பூஜை நேற்று நடந்தது. இந்த பூஜையில் தயாரிப்பாளர் போனிகபூர், இயக்குனர் வினோத் உள்பட படக்குழுவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த பூஜையில் தந்தி டிவியில் இருந்து சமீபத்தில் விலகிய ரங்கராஜ் பாண்டேவும் கலந்து கொண்டது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் 'தல 59' படத்தின் பூஜை முடிந்த சில நிமிடங்களில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா என்ற அறிவிப்பு தல ரசிகர்களுக்கு இரண்டிப்பு சந்தோஷத்தை கொடுத்தது. இந்த சந்தோஷத்தை யுவனும் தனது டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார்.

யுவனின் டுவீட்டை பார்த்த இயக்குனர் செல்வராகவன், 'நல்ல காம்பினேஷன், மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளேன்' என்று கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு கீழே அஜித் ரசிகர்கள் 'நீங்கள் ஒரு தல படத்தை இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்