தனுஷின் 'நானே வருவேன்' படப்பிடிப்பு எப்போது? செல்வராகவன் தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாக உள்ள ’நானே வருவேன்’ என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது என்பதும் கடந்த பொங்கல் தினத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே
தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் உள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘நானே வருவேன்’ படத்தின் ஆரம்பகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் தற்போது குஷியில் உள்ளனர்
ஏற்கனவே தனுஷின் ’கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் அதனை அடுத்து ஒரு சில வாரங்களில் அவர் நடித்து முடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் 'D43'படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
Never worked on a preproduction of this scale ! Gearing up for the shoot ! #Naanevaruven pic.twitter.com/8Yr2V0FGfS
— selvaraghavan (@selvaraghavan) March 30, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments