தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்தாரா செல்வராகவன்?

  • IndiaGlitz, [Wednesday,January 19 2022]

தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக நேற்று முன்தினம் இரவு அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் இந்த அறிவிப்பைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா பிரிவு குறித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். ஆனால் தனுஷின் சகோதரர் செல்வராகவன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே இந்த பிரிவை கணித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளதாக நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்’ என்று பதிவு செய்திருந்தார்.

இந்த டுவிட் அன்றைய நிலையில் யாருக்கும் புரியாத நிலையில் தற்போது படித்து பார்க்கும் போது தனுஷ்-ஐஸ்வர்யா விவகாரம் குறித்துதான் அவர் பதிவு செய்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொதுவாக விவாகரத்து செய்ய முடிவு செய்த தம்பதிகளிடம் உடனடியாக முடிவு எடுக்க வேண்டாம் என்றும் சில நாட்கள் தள்ளிப் போட்டு தள்ளிப் போடுங்கள், பிறகு பிரச்சினைகள் இருக்காது என்றும் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். அதே அறிவுரையை தான் செல்வராகவன் கடந்த டிசம்பர் 3ஆம் தேதியே இந்த டுவிட்டின் மூலம்க் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு கூறியிருப்பதாக தெரிகிறது.