'தி எண்ட்' கார்டு போட்ட செல்வராகவன்: ரசிகர்களின் வேற லெவல் கமெண்ட்ஸ் 

பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தி எண்ட் என்று பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல இயக்குனர் செல்வராகவன் தற்போது ‘சாணிக் காகிதம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை அடுத்து அவர் தனுஷ் நடித்துள்ள ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் ’புதுப்பேட்டை 2’, ’ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய படங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமூகத்தில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’தி எண்ட் என பதிவு செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த பதிவுக்கு ரசிகர்கள் வேற லெவல் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். சாணிக்காகிதம் படம் நிறைவு பெற்றதா? என்றும் ’பீஸ்ட்’ படத்தில் உங்கள் பகுதியின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதா? என்றும் உங்க குடும்ப வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டதா? என்றும் பல்வேறு கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். ஒரு சிலர் இதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை என்றும் பதிவு செய்து வருகின்றனர். ’தி எண்ட்’ என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை செல்வராகவனே விளக்குவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

'அரண்மனை 3' படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்ட குஷ்பு!

பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா உள்பட பலர் நடித்த 'அரண்மனை 3' திரைப்படம் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது எ

நடிகை சமந்தாவுடன் நடிக்க ஆர்வம் காட்டும் பிரபல பாலிவுட் நடிகர்!

தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் “தி பேமிலி மேன் சீஸன் 2’‘

6 மாதத்தில் 20கி எடையைக் கூட்டி, குறைத்தேன்… பாலிவுட் நடிகையின் உருக்கமான பதிவு!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை கங்கனா ரனாவத் மறைந்த முதலமைச்சர்

நெட்பிளிக்ஸில் ரிலீஸ் ஆகிறதா தனுஷின் அடுத்த படம்?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் அவருடைய அடுத்தப் படமும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

அமலாவை அடுத்து 30 வருடங்களுக்கு பின் நடிக்க வரும் தமிழ் நடிகை!

கடந்த எண்பதுகளில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த அமலா மீண்டும் முப்பது ஆண்டுகளுக்குப் பின் நடிக்க வந்துள்ளார் என்பதும் அவர் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு