ஆயிரத்தில் ஒருவன் - பொன்னியின் செல்வன் படங்களின் அபூர்வ ஒற்றுமை: செல்வராகவன்
- IndiaGlitz, [Saturday,August 20 2022]
மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமரர் கல்கி எழுதிய ’பொன்னியின் செல்வன்’ என்ற நாவலில் உள்ள ராஜராஜ சோழனின் பெருமைகளைப் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு சோழர்களின் பெருமையை குறிப்பிடும் வகையில் வெளியான ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார் என்பதும் இந்த படம் ரிலீஸானபோது பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் தற்போது இந்த படத்தின் அருமை அனைத்து ரசிகர்களுக்கும் தெரிய வந்துள்ளது. எனவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாகவும் செல்வராகவன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ படம் குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் செல்வராகவன் ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் கார்த்தி நடித்த முத்து கேரக்டரை பொன்னியின் செல்வன் நாவலில் உள்ள வந்தியத்தேவன் கேரக்டரை பார்த்து தான் உருவாக்கியதாக தெரிவித்தார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் உருவான முத்து கேரக்டரிலும் ’பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உள்ள வந்தியதேவன் கேரக்டரிலும் கார்த்தியே நடித்துள்ளார் என்பது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.