நான் அழுவதற்கான காரணம் என் குழந்தைகளுக்கு புரியவில்லை: செல்வராகவன் உருக்கம்..!

  • IndiaGlitz, [Monday,November 20 2023]

நான் அழுவதை பார்த்து நான் அழுவதற்கு காரணம் என்ன என்று என் குழந்தைகளுக்கு புரியவில்லை என்றும் தந்தை அழுது அவர்கள் பார்த்ததில்லை என்றும் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து கோப்பையை கைப்பற்ற தவறியது. இதனால் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களின் மனம் வேதனை அடைந்த நிலையில் பல திரையுலக பிரபலங்களும் தங்களது வேதனைகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் ’நேற்று கிரிக்கெட்டில் தோற்ற பிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்ததில்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றத்திற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது’ என்று பதிவு செய்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.