இந்த படத்தை 50 முறை பார்த்தேன்.. ரீமேக் செய்யப்பட்ட ரஜினி படம் குறித்து செல்வராகவன்..!
- IndiaGlitz, [Sunday,May 05 2024]
மோகன்லால் நடித்த சூப்பர் ஹிட் மலையாள திரைப்படத்தை சுமார் 50 முறை பார்த்து உள்ளேன் என்று இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் பாசில் இயக்கத்தில், மோகன்லால், ஷோபனா, சுரேஷ்கோபி, நெடுமுடி வேணு நடித்த ’மணிசித்திரதாழ்’ என்ற திரைப்படம் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் சுமார் 30 வருடங்களுக்கு முன்பே இந்த படம் 7 கோடி ரூபாய் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் தான் கன்னடத்தில் ’ஆப்தமித்ரா’ தமிழில் ’சந்திரமுகி’ ஹிந்தியில் ’Bhool Bhulaiyaa’, பெங்காலியில் ‘Rajmohol’ என ரீமேக் வெளியானது என்பதும் குறிப்பாக ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா நடித்த ’சந்திரமுகி’ திரைப்படம் சென்னையில் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓடி வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மோகன்லால் நடிப்பில் பாசில் இயக்கத்தில் உருவான ’மணிசித்திரதாழ்’ என்ற திரைப்படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருப்பேன் என்றும் பாசில் அவர்களுடைய கிளாசிக் திரைப்படம் என்றும் ஷோபனா சூப்பராக நடித்திருப்பார் என்பது மட்டுமின்றி அவர் தேசிய விருதையும் வாங்கினார் என்றும் மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை என்றும் தெரிவித்துள்ளார்.
சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளியான ஒரு திரைப்படத்தை 50 முறைக்கு மேல் பார்த்துள்ளதாக செல்வராகவன் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
""Manichitrathazhu "
— selvaraghavan (@selvaraghavan) May 4, 2024
The film I have seen almost 50 times ! A classic from Fazil sir. Shobana nailed it. She won a national award for the role. @Mohanlal sir , our national pride ! pic.twitter.com/GiBhk1lmVi