தனுஷ் குடும்பத்தில் இருந்து வந்த பாராட்டு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் 'ஸ்டார்' கவின்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதும் முதல் நாளே இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் நேற்றும், இன்றும் தமிழகம் முழுவதும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா கடந்த சில மாதங்களாக பெரிய வசூலை எட்டாமல் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் ’அரண்மனை 4’ திரைப்படம் மிகப்பெரிய வசூலை குவித்து நம்பிக்கையை தந்தது. இந்த நிலையில் தற்போது ‘ஸ்டார்’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால் இனி தமிழ் சினிமா மீண்டும் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கவின் நடித்த ‘ஸ்டார்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் பிரபல இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
‘கவின் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள், அவர்களை பற்றிய ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் அவர்கள் இருவரும் அற்புதமான, எதார்த்தமான கலைஞர்கள், அவர்கள் எந்த கதாபாத்திரத்தையும் எளிதாக நடித்து விடுகிறார்கள், தமிழ் சினிமாவுக்கு இது ஒரு சிறப்பான விஷயம்’ என்று தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் அவ்வளவு சீக்கிரத்தில் ஒருவரை பாராட்ட மாட்டார் என்ற நிலையில் அவருடைய வாயில் இருந்து பாராட்டு கிடைத்துள்ளதை அடுத்து கவின் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.
@Kavin_m_0431@Manikabali87
— selvaraghavan (@selvaraghavan) May 12, 2024
Kavin and Manikandan are
super actors. The good thing about them is they are both fantastic, realistic performers ! They can play any kind of role with ease. An excellent thing for Tamil cinema.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments