ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 எப்போது? செல்வராகவன் பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்வராகவன் இயக்கத்தில் உருவான ’புதுப்பேட்டை’ மற்றும் ’ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்விக்கு செல்வராகவன் பதில் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் ’காதல் கொண்டேன்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பின்னர் 2006 ஆம் ஆண்டு ’புதுப்பேட்டை’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் 2010ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ’புதுப்பேட்டை’ மற்றும் 'ஆயிரத்தில் ஒருவன்’ படங்களின் இரண்டாம் பாகத்தையும் செல்வராகவன் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது. இது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த செல்வராகவன் தற்போது இது குறித்த கேள்விக்கு மீண்டும் பதில் அளித்துள்ளார். ’புதுப்பேட்டை 2’ மற்றும் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் உருவாக்கப்படும் என்று அவர் பதிலளித்தார்.
மேலும் இன்று புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செல்வராகவன் ’தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மக்களின் முதல்வர் என்றும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் வரமாட்டாரா என்று மக்கள் ஏங்கி இருந்தார்கள் என்றும் தமிழ்நாடு உலகிலேயே சிறந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது நமது முதலமைச்சரால் தான் முடியும்’ என்றும் புகழாரம் சூட்டினார்.
#Video | "ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 படங்கள் எப்போது வரும்?" - அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!#Sunnews | #AayirathilOruvan | @selvaraghavan | #Pudhupettai pic.twitter.com/mSZhjoHHD9
— Sun News (@sunnewstamil) June 19, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments