'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்து செல்வராகவன் கூறிய ஆச்சரிய தகவல்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செல்வராகவன் அறிவித்தார். இந்த படம் குறித்த பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது என்பதை சொல்ல முடியுமா? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என்று கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள் என்று பதிலளித்துள்ளார்.

செல்வராகவன் இந்த பதிலை ரசிகர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே அவர் கூறியபடி 2024ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது.

More News

நடிகருக்கு இணையா சம்பளம் கேட்ட பாலிவுட் நடிகை… கிடைத்த பதில் என்ன தெரியுமா?

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். இவர் முன்னணி இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய “பத்மாவதி“,

மெஸ்ஸியின் ஜெர்ஸியுடன் போஸ் கொடுத்த பிரபல தமிழ் நடிகை!

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி, பார்சிலோனா அணிக்காக கடந்த 21 ஆண்டுகளாக விளையாடிய நிலையில் சமீபத்தில் ஒப்பந்தம் பதிப்பிக்கப்படாததால் பார்சிலோனா அணியில்

தங்கம் வென்ற ஒரே நாளில் நீரஜ் சோப்ராவுக்கு கிடைத்த ஆச்சரியம்

ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் பெற்ற கொடுத்த தங்க மகன் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரே நாளில் மூன்று மில்லியன் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது பெரும்

சென்னை ரெங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் தடை தொடர்கிறதா?

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் சென்னை மாநகராட்சித் விதித்திருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருவதை அடுத்து தடை மேலும் தொடருமா? அல்லது கடைகள் திறக்கப்படுமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம் 

தங்கம் வென்ற தங்க மகன் நீரஜ் சோப்ரா.....!சொகுசு கார் முதல் கோடிகளில் குவியும் ரொக்கம் வரை ...!

23 வயது நிரம்பிய நீரஜ்  சோப்ரா பங்குபெறும் முதல் ஒலிம்பிக் போட்டி இதுதான். டோக்கியோ-வில்