'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்து செல்வராகவன் கூறிய ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமாசென் உள்பட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை கடந்த சில மாதங்களுக்கு முன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் செல்வராகவன் அறிவித்தார். இந்த படம் குறித்த பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் முன்னணி நாளிதழ் ஒன்றில் ’ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த செய்திக்கு இயக்குனர் செல்வராகவன் தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். எப்போது அந்த மர்மமான ஆரம்பகட்ட பணிகள் நடந்தது என்பதை சொல்ல முடியுமா? அந்த மர்மமான தயாரிப்பாளர் யார் என்று கூற முடியுமா? உங்களது தரப்பிலிருந்து இந்த படம் குறித்து சரியாக விசாரியுங்கள் என்று பதிலளித்துள்ளார்.
செல்வராகவன் இந்த பதிலை ரசிகர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே அவர் கூறியபடி 2024ஆம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ படம் உருவாகும் என்று கூறப்பட்டு வருகிறது.
???? With all due respect can u tell us when the mysterious preproduction happen? And who is the mysterious producer? Pls kindly check your sources! https://t.co/2QDJsG2Ovr
— selvaraghavan (@selvaraghavan) August 8, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com