சூர்யாவுடன் மீண்டும் இணைய பிரபல இயக்குனர் விருப்பம்

  • IndiaGlitz, [Friday,August 10 2018]

நடிகர் சூர்யா ஒரு கேரக்டரில் நடிக்க தொடங்கிவிட்டால் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்பது தெரிந்ததே. தான் ஏற்று கொண்ட கேரக்டருக்காக அவர் தரும் உழைப்பு, ஒத்துழைப்பை போற்றாத இயக்குனர்கள் இருக்க முடியாது.

அந்த வகையில் தற்போது சூர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் 'என்.ஜி.கே. படத்தை இயக்கி வரும் இயக்குனர் செல்வராகவன், இந்த படத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்து கூறியபோது, 'இந்த அளவுக்கு ஒரு கேரக்டருக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கடின உழைப்பை சூர்யாவால் மட்டுமே கொடுக்க முடியும். நான் இயக்கிய நடிகர்களில் மீண்டும் ஒரு நடிகருடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என்றால் அது சூர்யாவாக மட்டுமே இருக்க முடியும்' என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் உடல்நலமின்றி இருந்த செல்வராகவன், தற்போது உடல்நலம் தேறி மீண்டும் முழுவீச்சில் 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழுவினர் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்

சூர்யா, ரகுல்ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். ட்ரிம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், ப்ரவீண் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.