காதல் சின்னத்தின் முன் ரொமான்ஸ் மூடில் செல்வராகவன்: வைரலாகும் செம புகைப்படங்கள்!
- IndiaGlitz, [Thursday,March 03 2022]
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் செல்வராகவன் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் காதல் சின்னமான தாஜ்மஹால் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு லீலாவதி என்ற மகளும், ஓம்கார் என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினர் காதலின் சின்னமான உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ளனர். அங்கு விதவிதமான கோணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கீதாஞ்சலி செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
இந்த நிலையில் செல்வராகவன் தற்போது இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பிசியாகி உள்ளார்.ஏற்கனவே விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள செல்வராகவன், ‘சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து உள்ளார். மேலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள செல்வராகவன், தற்போது தனுஷ் நடித்து வரும் ’நானே வருவேன்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.